சுவாமி ராம்தேவ் சொல்லும் இந்த கஷாயத்தை குடிங்க! மாரடைப்பே வராது
மரணத்தை உண்டாக்கும் மாரடைப்பை தவிர்க்க நாம் வாழ்கைமுறையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என சுவாமி ராம்தேவ் கூறி உள்ளார்.

மாரடைப்பு
தற்போது மாரடைப்பானது மக்கள் நடக்கும்போதும், நிற்கும்போதும், உட்காரும்போதும், அல்லது நடனமாடும்போதும் திடீரென உயிரிழக்கின்றனர். அந்த அளவிற்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.
ஆய்வின்படி ஒரு மனிதன் 35 வயதை கடந்த உடனேயே மாரடைப்பு அபாயத்தை உதிர்கொள்ள நேரிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதய நோயின் ஆரம்பத்தில் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாதவையாக இருப்பதால், சுகாதார நிபுணர்கள் தற்போது ஒவ்வொருவருக்கும் 19 வயதிலிருந்தே இதயப் பரிசோதனைகளை செய்ய பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் இதற்கு பரிசோதனை மட்டும் போதாது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் போன்றவற்றையும் நம் உடலில் கட்டுப்படுத்த வேண்டும்.
அதிகரித்த மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவை கூட மாரடைப்பிற்கு வழிவகுக்கும். எனவே தான் மக்களுடைய தற்போதைய வாழ்க்கை முறை அடிப்படையில் என்ன செய்தால் மாரடைப்பை தவிர்க்கலாம் என்று சுவாமி ராம்தேவ் கூறி உள்ளார்.

முதலிடத்தில் இதய நோய்
இதயம் தொடர்பான நோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, அதிக கொலஸ்ட்ரால், நெஞ்சு வலி மற்றும் வியர்வை போன்ற பல காரணங்களாலும் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இதற்காக, இதயம் தொடர்பான பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்துகொள்வது அவசியம். சில பயிற்சிகளை செய்வதன் மூலம் உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை நீங்களே கண்டறியலாம்.
இதற்காகு 1 நிமிடத்தில் 50-60 படிகள் ஏறுலாம் தொடர்ச்சியாக 20 சிட்-அப்ஸ் செய்யலாம், ஒரு கண்ணாடி ஜாடியின் மூடியைத் திறக்க முயற்சிப்பது போன்ற பிடிப்புப் பரிசோதனையையும் நீங்கள் செய்து உங்கள் இதய ஆராக்கியத்தை சோதித்து கொள்ளலாம்.

சுவாமி ராம் தேவ் அறிவுரை
- மோசமான வாழ்க்கை முறை, இதய நோய் அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணமாகும். உங்கள் அன்றாட வழக்கத்தை மேம்படுத்துவதே மிக முக்கியமானது.
- இதற்கு நீங்கள் புகையிலை மற்றும் மதுவிலிருந்து விலகி இருங்கள். துரித உணவுகளுக்குப் பதிலாக, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.
- தினமும் சிறிது நேரம் யோகா பயிற்சி செய்யுங்கள். சிறிது நேரம் நடப்பதன் மூலமும், மெதுவாக ஓடுவதன் மூலமும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். நீச்சல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுங்கள் இது இதயத்தை வலுப்படுத்தும்.
- இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவு மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

- தண்ணீரின் அளவை அதிகரியுங்கள், உப்பு மற்றும் சர்க்கரையைக் குறையுங்கள், அதிக நார்ச்சத்து எடுத்துக்கொள்ளுங்கள், முழு தானியங்கள், புரதம் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள்.
- இது தவிர, 15 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள், தினமும் காலையில் சுரைக்காய் சாறு குடியுங்கள், பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள், புகைபிடிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்திடுங்கள்.
- சுரைக்காய் சூப், சுரைக்காய் காய்கறி மற்றும் சுரைக்காய் சாறு குடியுங்கள். ஆளி விதைகள், பூண்டு, இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள்.
- தினமும் மருதம் பட்டை கஷாயம் குடியுங்கள். இவற்றை செய்தால் மாரடைப்பு வரவே வராது என சுவாமி ராம்தேவ் பரிந்துரைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |