Suvarotti Varuval: ரத்தத்தை அதிகரிக்கும் சுவரொட்டி வறுவல்
ஆட்டுக்கறியை விட அதன் மற்ற உறுப்புகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன, குறிப்பாக ரத்த அளவை அதிகரிக்க பலரும் பரிந்துரைப்பது சுவரொட்டி எனும் மண்ணீரலைத் தான்.
ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள நபர்கள் வாரம் ஒருமுறை இதை தவறாமல் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள், ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடுவது பலனைத் தரும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கும் அற்புதமான உணவு சுவரொட்டி தான்.
இந்த பதிவில் சுவரொட்டி வறுவல் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சுவரொட்டி- 2
சின்ன வெங்காயம்- 10
இஞ்சி, பூண்டு விழுது- தேவையான அளவு
கரம் மசாலா தூள்- அரை டீஸ்பூன்
பெருஞ்சீரகம்- அரை டீஸ்பூன்
தேங்காய்- சிறிதளவு
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
செய்முறை
சுவரொட்டி வெட்டாமல் வாங்கி வரவும், நன்றாக சுத்தம் செய்த பின்னர் குக்கரில் போட்டு 2 விசில் வரை வேகவைத்துக்கொள்ளவும்.
பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும், தேங்காய்- பெருஞ்சீரகத்தை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்ததும், பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, இலவங்கப்பட்டை கருவேப்பில்லை சேர்க்கவும்.
இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்கவும், வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
இதனுடன் சுவரொட்டி சேர்த்து வதக்கவும், தண்ணீர் அதிகளவு சேர்க்க வேண்டாம், இதனுடன் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும், இதனுடன் தேங்காய் கலவையை சேர்க்கவும், கடைசியாக நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வறுவல் தயார்!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |