ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு: இப்படி செய்து பாருங்க
தொன்று தொட்டு சமையலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிளகு உடவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மிளகில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அது தவிர, நம்முடைய அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்றாகவும் மிளகு உள்ளது.
மிளகில் செய்யப்பட்ட ரசம் கண்டிப்பாக நாம் அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இருப்பினும், மிளகு குழம்பு பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிலர் மிளகு குழம்பு செய்ய நிறைய நேரம் செலவாகும், பல பொருட்களை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால், இந்த வகை மிளகு குழம்பு செய்வது மிகவும் எளிமையானது.
மேலும், எந்தக் காய்கறிகளும் தேவையில்லை. அதோடு செலவும் மிச்சம். எப்படி செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு
கொத்தமல்லி தேவையான அளவு
கடுகு வெந்தியம் 40 கிராம்
புளி 50 கிராம்
பூண்டு
ஒரு கரண்டி மஞ்சள் தூள்
கறிவேப்பிலை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
துவரம் பருப்பு இரண்டு ஸ்பூன்
4-5 காய்ந்த மிளகாய்
நல்லெண்ணெய் நான்கு கரண்டி
செய்முறை
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மூன்று ஸ்பூன் மிளகு, கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, கிராம்பு, 4-5 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு பேனில் கறிவேப்பிலை இலைகள் போட்டு வதக்கவும். இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிளகு குழம்பு செய்வதற்கு புளி தண்ணீரை தயாரித்து கொள்ளவும். இப்போது ஒரு பெரிய கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
அதில் கடுகு மற்றும் சிறிதளவு வெந்தயம் சேர்க்கவும்.அதோடு காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது புளி தண்ணீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்க்கவும்.
பின்னர நன்றாக கொதிக்க விடவும். தீயின் வேகத்தைக் குறைத்து மிளகு குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும்.
குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்த வர ஆரம்பிக்கும் போது இறக்கினால் சூப்பரான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த மிளகு குழம்பு ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |