ஜோதிகாவிற்கு போட்டியாக வளர்ந்திருக்கும் மகள்: மீண்டும் வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா- ஜோதிகாவின் மகள் தியாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா- ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் சூர்யா கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா தற்போது சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்தார். தொடர்ந்தும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
இவர்கள் குறித்து இணையத்தில் பல தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணம் தான் இருந்துக் கொண்டிருக்கிறது.
ஜோதிகாவின் மகள்
இந்நிலையில் இணையத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளான தியாவின் சில புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகின்றது.
சூர்யா மற்றும் ஜோதிகா தங்களின் பிள்ளைகளை மீடியாக்களிடம் இருந்து பாதுகாத்து வருகின்ற நிலையில், அண்மையில் பிள்ளைகளுடன் ரெஸ்டாரெண்டுக்கு சென்ற போது அவர்களை சூழ்ந்துக் கொண்ட சிலரால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகியிருக்கிறது.
அந்தப் புகைப்படத்தில் அவர் ஜோதிகா அளவிற்கு உயரமாக வளர்ந்து குட்டையாக உடையணித்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |