சூர்யா-ஜோதிகா கீழடிக்கு போனதற்கு காரணம் இதுதான்: உண்மையை உடைத்துப்பேசிய பயில்வான்!
நடிகர் சூர்யா தனது குடும்பத்தோடு கீழடி அருங்காட்சியத்திற்கு சென்றதற்கான காரணத்தை கூறியிருக்கிறார் சர்ச்சை நாயகன் பயில்வான்.
சூர்யா- ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் சூர்யா கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா தற்போது சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்தார். தொடர்ந்தும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
இதற்காகத் தான் கீழடிக்கு போனார்கள்
இந்த மாதம் முதலாம் திகதி சூர்யாவின் குடும்பத்தினர் அருங்காட்சியத்தைப் பார்வையிடச் சென்றிருந்தனர். இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் சென்றிருந்தார்.
இந்த அருங்காட்சியத்தை காண பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் வெயிலில் கால் கடுக்க நின்றிருந்தார்கள். ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் இவர்கள் மட்டும் அந்த அருங்காட்சியத்தைப் பார்வையிட்டு வந்தார்கள்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பொதுமக்களும் சூர்யா விதிகளை மீறிவிட்டார் விமர்சனம் செய்தனர்.
கட்டணம் செலுத்தவில்லை
குறித்த கீழடி அருங்காட்சியத்தியத்தை பார்வையிடுவதற்கு ஒரு தொகை கட்டணம் கொடுத்து விட்டுதான் உள்ளே செல்ல முடியும் ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் கூட இருந்ததால் அவர்கள் யாருமே கட்டணம் செலுத்தவில்லையாம்.
மேலும், சூர்யா குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி விட்டார்விட்டார். இதனால் இவர்களுக்குள் இருக்கும் குடும்ப சண்டையை மறைப்பதற்காகத் தான் கீழடிக்கு அம்மா, அப்பாவை அழைத்துச் சென்றதாக பயில்வான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.