சூர்யா- ஜோதிகாவின் மகளா இது? செம குத்தாட்டம் போடும் வீடியோ
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டவர்கள் சூர்யா- ஜோதிகா.
இன்றுவரை ஒருவர் மீது ஒருவர் கொண்ட அளவு கடந்த காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
என்னதான் படங்களில் பிஸியாக இருந்தாலும் இருவருமே குடும்பத்துக்காக நேரத்தை செலவிடுவதில் தவறவில்லை.
இந்நிலையில் இவர்களின் மகளான தியா, நடனமாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது இந்தவீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அந்நிகழ்வில் ராதிகா உள்பட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சூர்யா-ஜோதிகா தம்பதி மகள் தியா விளையாட்டு துறையில் ஜொலிக்க காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ ரசிகர்களுக்கு விருந்தாகிறது.