10ம் வகுப்பு தேர்வில் சூர்யாவின் மகள் பெற்ற மார்க் எவ்வளவு தெரியுமா?
பிரபல நட்சத்திர ஜோடிகளான சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
காதல் டூ கல்யாணம்
தமிழ் சினிமாவின் மிக முக்கியமாக நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா- ஜோதிகா.
சினிமாவில் நடித்த போது காதலிக்க தொடங்கிய இவர்கள், நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கடந்த 2006ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
மாமனார் புகழும் மருமகளாக திகழ்ந்த ஜோதிகா, பல ஆண்டுகளுக்கு பின்னர் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
பெண்ணை மையப்படுத்தும் கதைகளை, பெண்களை ஊக்கப்படுத்தும் கதைகளில் நடித்து கவனம் பெற்று வருகிறார் ஜோதிகா.
படிப்பில் அசத்தும் பிள்ளைகள்
இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளார், தியாவுக்கு 15 வயதும், தேவ்க்கு 12 வயதும் ஆகிறது.
தியா தற்போது 10ம் வகுப்பு படித்து முடித்துள்ளார், நேற்று 10ம் வகுப்பான முடிவுகள் வெளியான நிலையில் தியா வாங்கிய மதிப்பெண்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி தமிழில் 95 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்ணும், கணிதத்தில் 100 மதிப்பெண்ணும், அறிவியலில் 98 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்ணும் பெற்றுள்ளாராம்.
எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்ணை மகள் பெற்றுள்ளதால் சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்களாம்.
இந்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
