ஒரு குழந்தைக்கு அம்மா செய்ற காரியமா இது? திட்டித்தீர்த்த பெண் ரசிகைகள்! நடிகையின் பதிலடி
நடிகை விஜயலஷ்மி வெளியிட்ட நடன காணொளி பார்வையாளர்களை கடுப்பில் ஆழ்த்தியதோடு, சரமாரியாக திட்டி வருகின்றனர்.
நடிகை விஜயலஷ்மி
தமிழில் சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான விஜி பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். ஆனால் இந்த நிகழ்ச்சிகள் கடைசி வரை செல்லாமல் வெளியே வந்தார்.
ஆனால் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து சவால்களையும் சந்தித்து இறுதியில் ஒரு கோடி பரிசினை தட்டிச் சென்றார்.
விஜயலக்ஷ்மி தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார். பெரோஸ் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழர்களுக்கு பிச்சைக்காரர் வழங்கிய நிதிஉதவி! நெகிழ வைத்த சம்பவம்
விஜயலஷ்மி வெளியிட்ட காணொளி
சமூகவலைத்தளங்களில் பல காணொளிகளை வெளியிட்டு வரும் இவர், தற்போது நடனமாடும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த பெண் ஒருவர் இந்த ஆட்டம் தேவையா ஒரு அம்மாவா இருக்க என்று கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் கருத்திற்கு பதில் அளித்த விஜயலட்சுமி ‘அப்போ அம்மா அண்ணா மூலைல உக்காந்து அழனுமா? என்று சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
இறங்கிய வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம்! இன்றைய விலை என்ன?
விஜிக்கு ஆதரவு தெரிவித்த அனிதா :
இந்நிலையில் விஜய லஷ்மிக்கு பிக்பாஸ் அனிதா ஆதரவு தெரிவித்து பதிவ ஒன்றினை வெளியிட்டுள்ளார். ‘அம்மாகளுக்கு மட்டுமல்ல, திருமணமான அனைத்து பெண்களுக்கும் இது பொருந்தும். நமக்கு கிடைக்காத சுதந்திரம் இவங்களுக்கு எப்படி கிடைக்கலாம் என்பது தான் விஷயமே. வருத்தமான விஷயம் என்னவென்றால், இது போன்ற கேள்விகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சிலர் இன்னமும் இருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார் அனிதா.
பிக்பாஸ் அனிதா 4வது சீசனில் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல பெயரை வாங்கிய நிலையில், ஆனால் அல்டிமேட்டில் கலந்து கொண்டு பலரது வெறுப்பினை சம்பாதித்து உண்மை முகத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.