இலங்கை தமிழர்களுக்கு பிச்சைக்காரர் வழங்கிய நிதிஉதவி! நெகிழ வைத்த சம்பவம்
இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதற்கு பிச்சைக்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த பணத்தினை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவதிப்படும் இலங்கை மக்கள்
இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்து அதற்காக பொருள்கள் திரட்டினார்.
இந்த நிலையில் அந்தப் பொருள்கள் சென்னையிலிருந்து நாளை கப்பல் மூலம் கிளம்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஸ்வர்யாவால் தங்கை குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை! கடும் அதிருப்தியில் ரஜினிகாந்த்
பிச்சைக்ககாரரின் உயர்ந்த உள்ளம்
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பிச்சைக்காரர் ஒருவர் பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுத்த ரூ.10 ஆயிரம் பணத்தை இலங்கை தமிழர் நிவாரண நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன் மதுரை ஆட்சியரிடம் ரூ.50 ஆயிரம் இலங்கை மக்களுக்கு நிவாரணம் நிதி வழங்கினார். இவர் கொரொனா காலத்தில் நிவாரண நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.