உயிருக்கே ஆபத்து! உடனே வெளியேற கூறிய மருத்துவர்: சர்வைவர் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளரின் பரிதாபநிலை
சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறி ஹாஸ்பிடலுக்கு செல்லும்படி டாக்டர் கூறினாலும், அதை மறுத்து அவர் போட்டியில் தொடர்வதாக கூறி இருக்கிறார்.
சர்வைவர் ஷோவில் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் தொடர்ந்து நாளுக்கு நாள் மிக கடினமாக மாறி வருகிறது. அது ஒரு புறம் இருந்தாலும் அங்கு எந்த வசதியும் இன்று கடற்கரை அருகில் தங்குவதால் பல பிரச்சனைகள் வந்திருக்கிறது.
நேற்று விக்ராந்த் நெற்றியில் காயம் ஏற்பட்டது, அதற்கு பேன்டேஜ் போட்டு தான் அவர் வந்திருந்தார். அதன் பின் ராமுக்கு உடல் முழுவதும் பூச்சி கடித்ததால் ஸ்கின் அலர்ஜி வந்திருக்கிறது. அதனால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி லேடி கேஷுக்கும் பூச்சு கடியால் உடலில் ஸ்கின் அலர்ஜி வந்திருக்கிறது. அவரை பார்த்த மருத்துவர் உங்கள் உயிருக்கு கூட பிரச்சனையாக இது மாறலாம் அதனால் உடனே ஷோவில் இருந்து வெளியேறி உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகுங்கள் என சொன்னாராம்.
ஆனால் லேடி கேஷ் அதை மறுத்து ஷோவில் தான் தொடர்வதாக கூறி போட்டிக்கு வந்திருந்தார். அதை பார்த்து அர்ஜுன் மற்றும் மற்ற போட்டியாளர்கள் உதவி செய்தனர்.