பிக்பாஸில் சற்றுமுன்னர் அதிரடி Entry கொடுத்த பிரபல தமிழ் நடிகை! தீயாய் பரவும் தகவல்
பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை அஞ்சலி தற்போது சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
60 நாட்களை எட்டியுள்ள ஒரு வைல்டு கார்டு போட்டியாளர்க் கூட பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படாதது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் பிரபல தமிழ் நடிகை அஞ்சலி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஹாட்ஸ்டார் புகைப்படத்தினை கண்டுப்பிடிக்க கூறி வெளியிட்ட பதிவு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்திருந்தது.
நடிகை அஞ்சலி எண்ட்ரி
தற்போது நடிகை அஞ்சலி பிக் பாஸிற்குள் சென்றிருப்பது உறுதியாகியுள்ளது.
நடிகை அஞ்சலி நடித்துள்ள ஃபால் (Fall) எனும் வெப் தொடரை புரமோட் செய்வதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்த வெப் தொடர் வருகிற டிசம்பர் 9-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையிலேயே அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த காட்சிகள் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.