துளிகூட மேக்கப் இல்லாமல் சூர்யாவுடன் ஜோதிகா! மலையாள நடிகருக்கு கொடுத்த இன்பஅதிர்ச்சி
நட்சத்திர ஜோடியாக வலம்வரும் சூர்யா மற்றும் ஜோதிகா மலையாள நடிகரின் வீட்டிற்கு சர்ப்ரைஸாக சென்று அதிர்ச்சி கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சூர்யா மற்றும் ஜோதிகா
சூர்யா மற்றும் ஜோதிகா படத்தில் ஜோடியாக நடித்த போது காதலித்து பின்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஜோதிகா சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.
பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். பின்பு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தையும், பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் மம்முட்டிக்கு ஜோடியாக காதல் என்கிற மலையாள படத்தில் நடித்துவரும் ஜோதிகாவிற்கு, சமீபத்தில் சூர்யா படப்பிடிப்பு தளத்திற்கு நேரடியாக சென்று பிரியாணி சமைத்து கொடுத்து அசத்தினார்.
மலையாள நடிகர் வீட்டிற்கு விசிட்
இந்நிலையில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வீட்டிற்கு ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். மேலும் இப்புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “உத்வேகம் தரும் நண்பர்கள்” என கேப்ஷனும் பிருத்விராஜ் கொடுத்துள்ளார்.
நடிகை ஜோதிகாவும், நடிகர் பிருத்விராஜும் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான மொழி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த சந்திப்பு நட்பு ரீதியாக இருந்தாலும், சூர்யாவை வைத்து பிருத்வி படம் இயக்கப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.