சூரியன் புதன் சேர்க்கை... புத ஆதித்ய யோகத்தை அடையும் ராசியினர்கள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் தங்கள் நிலைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கின்றன.
செப்டம்பர் 17ம் தேதி சூரியன் கன்னி ராசியில் பிரவேசித்துள்ளார். சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிகளிலும் இருக்கும்.
சூரியன் கன்னி ராசியில் நுழைவதால் கன்னி ராசியில் புத ஆதித்ய யோகம் உருவாகி வருகிறது. எனவே எந்தெந்த ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு ஆதித்ய யோகத்தால் மகத்தான பலன்களை அடைவார்கள். இந்த நேரத்தில், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
மேலும், செலவுகள் கூடும், ஆனால் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்காது. நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இதுவே சிறந்த நேரமாக இருக்கும்.
நிதி நிலை மேம்படும். நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால் அதற்கும் இது சாதகமான நேரமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு இந்த நேரம் சிறப்பான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல செயல்திறன் இருக்கும்.
இதனால் பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வேலை சம்பந்தமாக வெளி நாடுகளுக்கு செல்ல நேரிடலாம்.
தொடர்ந்து, கடின உழைப்பின் முழு பலன் கிடைக்கும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். நீங்கள் புதிய வேலைகளைச் செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த காலத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
உத்தியோகம் போன்றவற்றில் புகழ் பெறுவீர்கள். தொடர்ந்து, பிறருடன் சேர்ந்து செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.