உதயமாகும் சூர்ய பெயர்ச்சி... இந்த ராசியினர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு கிரகமானது அதன் நிலையை மாறும்போது அதன் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் காணப்படும். இதன் விளைவு சிலருக்கு நல்லதாகவும் இருக்கும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கும்.
அதன்படி, ஜூன் 15ஆம் தேதி சூரியன் ரிஷப ராசியை விட்டு மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
மேஷம் ராசியினர்களுக்கு சூரியனின் மாற்றத்தால் கலவையான பலன்களையே பெறுவார்கள். இந்த காலக்கட்டத்தில் பெரிய முதலீடு செய்யும் முன் கண்டிப்பாக பெரியவர்களின் ஆலோசனையைக்கேட்டு செய்யவும்.
குடும்ப சூழ்நிலை நிம்மதியை தரும். இந்த காலக்கட்டத்தில், சகோதர, சகோதரிகளுக்கு தகராறு ஏற்படலாம்.
கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். இவை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

கடகம்
கடக ராசியினர்களுக்கு மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இதனால் நீங்கள் வருத்தமும் கவலையும் அடையலாம்.
சில வேலைகளில் தோல்வியே உண்டாகும். கடன் கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். இல்லையெனில் கடனால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மாணவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
எனினும், உழைத்தால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகளும் மன வேறுபாடுகளும் ஏற்படலாம். எனவே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு சூரியன் மிதுன ராசியில் நுழையவுள்ளார். அதன் தாக்கம் ரிஷப ராசிக்காரர்களிடமும் காணப்படும்.
இதனால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். குழந்தைகள் மூலம் மன அழுத்தம் ஏற்படலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
இந்த காலகட்டத்தில் கடினமாக ஒருவர் உழைத்தாலும் பலன் கிடைக்காது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும்.
தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் அதிகப்படியான கடவுள் வழிபாடு நன்மை பயக்கும்.
வியாபாரத்தை மாற்றும் முன் பல முறை யோசித்து பின்னர் முடிவு செய்யுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஈடுபடுபட்டுள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அடுத்து, நீங்கள் பயணிக்கும் எண்ணத்தில் இருந்தால், அந்த பயணத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்துங்கள்.