சில தினங்களில் ஆரம்பமாகும் சூரிய பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்
மார்ச் மாதம் 15ம் தேதி சூர்ய பெயர்ச்சி ஆரம்பமாக இருப்பதால், எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சூரிய பெயர்ச்சி
தற்போதையுள்ள காலக்கட்டத்திற்கு தகுந்தாற் போல் மாறி வரும் கிரகங்கள் சில அழிவுகளை ஏற்படுத்த தயாராகி வருகின்றது. சூரிய பெயர்ச்சியினால் நமது வாழவில் நடக்கும் விடயங்கள் எதிர்மறையாகவும் சில தருணங்களில் நடக்க வாய்ப்புள்ளதாம்
வரும் 15ம் தேதியன்றி கிரகங்களின் அதிபதியான சூரியன் மீன ராசிக்கும் செல்வதுடன், இதன் அதிபதி வியாழன கிரகமாகும்....
சூரியக் கடவுளுக்கும், வியாழன் கிரகத்திற்கு இடையே உள்ள நட்பினால், சுப பலன்களை பெறும் ராசிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீன ராசியில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன், இதனால் தன்னம்பிக்கை ஏற்படும்... திருமணமாகாதவர்கள் நல்ல உறவு கிடைப்பதுடன், தொழில் ரீதியான லாபத்தையும் பெறலாம். மேலும் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தையும் பெறலாம்.
ஜனவரி முதல் சனியின் பாதிப்பும் உங்கள் மீது தொடங்கியுள்ளது. சற்று கவனமாகவும் இருக்க வேண்டும்.
தனுசு
சூரிய பகவானின் ராசி மாற்றம் தனுசு ராசிக்கு நல்ல பலனையே அளிக்கின்றது. வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். தாயுடனான உறவு பலம் ஆகும். ரியல் எஸ்டேட், உணவு ஆகியவை தொடர்பான வணிகத்தில் உள்ளவர்களுக்கு இந்த நேரம் நன்றாக உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியிலிருந்து ஐந்தாம் இடத்தில் சூரியன் சஞ்சரித்து வரும் நிலையில், இதனால் குடும்பத்தில் விருத்தி ஏற்படும். காதல் விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். இதனுடன் எதிர்பாராத விதமாக உங்களுக்கு பணம் கிடைக்கும்.