சினிமாவுக்குள் என்றி கொடுக்கும் சூர்யா- ஜோதிகாவின் ஆசை மகள் தியா- ஆஸ்கர் செல்லும் வாய்ப்பு
அண்மையில் பள்ளிப்படிப்பை முடித்த சூர்யா- ஜோதிகா மகள் தியா தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா இவர்களும் அடங்குவார்கள்.
சுமாராக 4 வருடங்கள் காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
திருமணமாகி பல வருடங்கள் கடந்தாலும் சூர்யா - ஜோதிகாவின் காதல் விவாகரம் இன்றும் பேட்டிகளில் பேசப்படுகின்றன.
ஆரம்ப காலங்களில் சூர்யா - ஜோதிகாவின் காதலை சிவக்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பின்னர் 4 வருடங்களுக்கு பின்னர் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது.
தியாவின் சினிமா என்றி
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் குழந்தைகளான தேவ்- தியா இருவரும் அடுத்தடுத்து சாதனைகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், சூர்யா - ஜோதிகாவின் அன்பு மகள் தியா இயக்குநராகியுள்ளதாக சூர்யா பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து குஷி படத்தின் பார்ட் 2 எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசியிருக்கிறார். தளபதி விஜய்யின் மகன் நன்றாக வளர்ந்து விட்டதால் அவரை கதாநாயகனாக பள்ளிப்படிப்பை முடித்த தியாவை கதாநாயகியாக வைத்து கொண்டு இந்த திரைப்படம் உருவாகும் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
இதற்கு பதில் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, “சில அதிசயங்களை உருவாக்க முடியாது. அதுவாகவே நடக்கணும். இறைவன் அமைத்து கொடுத்தால் அது நன்றாகவே நடக்கும்...” எனக் கூறியுள்ளார். 'குஷி' பட ரீ-ரிலீஸ் விழாவின் போது இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பேசியதை இணையவாசிகளுக்கு பல சந்தேகங்களை தூண்டியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |