இன்னொரு ஜென்மமும் இது வேணும்.. கண்ணீரில் ரோபோ ஷங்கர் மனைவி
“இன்னொரு ஜென்மம் இருந்தால் அவர் நமக்கு வேண்டும்...” என நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரோபோ ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.
இவர், தற்போது இல்லாவிட்டாலும் இவர் பற்றிய செய்திகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
சினிமாவில் சாதாரண காமெடி நடிகராக இருந்தாலும், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த ரோபோ சங்கர், இறுதியாகவும் அது இது எது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
மனைவி, மகள் மீது கொள்ள பிரியம் வைத்திருந்த ரோபோ சங்கர் தற்போது அவர்களுடன் இல்லாவிட்டாலும் நினைவுகளால் சூழ்ந்திருக்கிறார்.
மனைவி பிரியங்கா கூறியது..
இந்த நிலையில், நடிகர் ரோபோ ஷங்கர் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை பிரபலங்களை வைத்து நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் குடும்பத்தினர், “இன்னொரு ஜென்மம் இருந்தால் அவர் நமக்கு வேண்டும். அத்துடன் இந்த மேடையில் தான் மீடியா பயணத்தை ஆரம்பித்தார், அவரின் இறுதி நிகழ்ச்சியும் இந்த மேடையில் தான்..” என கண்ணீருடன் தன்னுடைய சோகத்தை பகிர்ந்துள்ளனர்.
இந்த காணொளி இணையவாசிகளை கண்ணீரில் முழ்கச் செய்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |