நாள்பட்ட நோய்களை நிரந்தரமாக குணமாக்கும் பாட்டி வைத்தியங்கள்- அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நம்மிள் பலர் சிறு வியாதிகள் வந்தால் கூட மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தலைவலி, செரிமான கோளாறுகள், பல் வலி போன்ற நோய்களுக்கு மருந்துவில்லைகளை விட வீட்டில் செய்யும் பாட்டி வைத்தியங்கள் நிரந்தர தீர்வை கொடுக்கிறது.
பாட்டி வைத்தியம் காலம் காலமாக தொடர்ந்து வரும் பாரம்பரியமான மருத்துவ முறையாகும். “உணவே மருந்து” என்ற தத்துவத்தின் அடிப்படையில் சளி, தலைவலி, வயிற்று வலி, சருமப் பிரச்சனைகள், பொடுகு உள்ளிட்ட பல நோய்களுக்கு இது நிரந்தர நிவாரணம் கொடுக்கும்.
உதாரணமாக, சளி பிரச்சினையுள்ளவர்கள் இஞ்சி போட்டு தேநீர் குடிக்கலாம். அதே போன்று வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு பெருஞ்சீரகம் போட்டு தண்ணீர் குடிக்கலாம். பாட்டி வைத்தியங்கள் பெரியவர்களை விட சிறியவர்களுக்கு சீக்கிரமாக பலன் தரும்.
அந்த வகையில், நாள்பட்ட நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் பாட்டி வைத்தியங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. செரிமான கோளாறுகள்
இஞ்சி, கறிவேப்பிலை,சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு டம்பளர் தண்ணீருடன் கொதிக்க விட்டு, அதனை வடிக்கட்டி குடித்தால் செரிமான கோளாறுகள் குறையும்.
2. தலைவலி
ஐந்து துளசி இலைகள், சிறிய துண்டு இஞ்சி, 2 இலவங்கம் துண்டு ஆகிய அனைத்தையும் ஒன்றாக அரைத்து நெற்றியில் பற்றாக போட வேண்டும். இந்த பற்று தலைவலியை குறைக்கும்.
3. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யுடன் சேர்த்து நன்றாக வறுக்கவும். அதனை அரைத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வயிற்று வலி குறையும்.
4. உதடு வெடிப்பு பிரச்சினை
கரும்பு சக்கையை நன்றாக எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை நெய்யுடன் கலந்து உதடு வெடிப்பு உள்ளவர்கள் தடவினால் உதடு வெடிப்பு குணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |