சூர்யா ஜோதிகா குழந்தைகளா இது? கையில் விருதுடன் அடையாளம் தெரியாமல் நிற்கும் புகைப்படம்
நடிகர் சூர்யாவின் மகள் தியாவும், மகன் தேவ்வும் தேசிய விருதுடன் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
தேசிய விருது பெற்ற சூர்யா ஜோதிகா
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்தில் மாறா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் சூர்யா.
இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி சூரரைப் போற்று திரைப்படத்திற்கு மேலும் நான்கு தேசிய விருதுகளும் கிடைத்திருந்தன.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், இப்படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும், இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
அதுமட்டுமின்றி சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் சூரரைப் போற்று தட்டிச் சென்றது. 68-வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
குடும்பத்துடன் வெளியான புகைப்படம்
அதில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, அவர்களின் மகன் தேவ், மகள் தியா ஆகியோர் கலந்துகொண்டனர். சூர்யா விருது வாங்கும் போது ஜோதிகாவும், ஜோதிகா விருது வாங்கும் போது சூர்யாவும் மாறி மாறி புகைப்படம் எடுத்த தருணம் இணையத்தில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், சூர்யாவின் மகள் தியாவும், மகன் தேவ்வும் தேசிய விருதுடன் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.


