அழகில் ஜோதிகாவிற்கே டஃப் கொடுத்த மகள் தியா! எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்க
நடிகை ஜோதிகா தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை ஜோதிகா
மும்பையை சேர்ந்த ஜோதிகா சினிமாவில் கால் பதித்தது என்றால் இந்தி படத்தில் தான். பின்பு 1999ம் ஆண்டு வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தார்.
அஜித்திற்கு ஜோடியாக முதல் படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற இவர் பின்பு சூர்யாவுடன் நடிக்க ஆரம்பித்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்த இவர்களின் நட்பு பின்பு காதலாக மாறியது.
பின்பு சூர்யாவுடன் பல படங்களில் நடித்த ஜோதிகா, தங்களது 6 ஆண்டு காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த 2006ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஜோதிகா குழந்தைகளுக்காக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது மம்முட்டியுடன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றார்.
மகன், மகளுடன் வெளியிட்ட புகைப்படம்
இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படத்தில் அம்மா ஜோதிகாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹீரோயின் போல் இருக்கும் தியா, கையில் நாய்க்குட்டி ஒன்றையும் வைத்துள்ளார்.
ஜோதிகா மற்றும் தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.