சூர்யாவின் மகள் தியா 12ம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண் எவ்வளவு? வெளியான தகவல்
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா 12ம் வகுப்பு தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடியாக வலம் சூர்யா, ஜோடி தம்பதியினர், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிக்கையில் காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் தற்போது அப்பா சூர்யாவையே தாண்டி வளர்ந்து நிற்கின்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் மகள் தியா தற்போது 12ம் வகுப்பு முடித்துள்ள நிலையில், இவரது மதிப்பெண் என்ன என்பது வெளியாகியுள்ளது.
இருவரும் சினிமாவில் பிஸியாக வாழ்ந்துவந்தாலும் பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

தியா 12ம் வகுப்பில் 600 மதிப்பெண்ணுக்கு 581 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழில் 96, ஆங்கிலத்தில் 97, கணிதம் 94, இயற்பியல் 99, வேதியியல் 98, கணினி அறிவியல் 97 மதிப்பெண்களும் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த மதிப்பெண்ணின் உண்மைத்தன்மை குறித்த தகவல் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |