50 வயதை எட்டிய சூர்யா... வாழ்த்து சொல்ல குவிந்த ரசிகர் கூட்டம்! வைரலாகும் காணொளி
நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் பல இடங்களில் கூடினர்.
அவரது வீட்டிற்கு வெளியே திரண்ட ரசிகர்கள், சூர்யாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவரது பிறந்தநாளைக் கொண்டாடினர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரவாகி வருகின்றது.
சூர்யா
நடிகர் சிவகுமாரின் மகனாக சினிமாவில் அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளார் சூர்யா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், நேருக்கு நேர் படத்தில் ஆரம்பித்து இன்றுவரையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்து வைத்திருக்கின்றார்.
சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்திருந்தார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் வசூலில் பெரிய வீழ்ச்சியை சந்தித்தாலும், அடுத்தடுத்து படங்களில் நடித்து வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆயத்தமாகி வரும் சூர்யா அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சூர்யா, இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நேற்று இரவு தனது குடும்பத்துடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சூர்யா கொண்டாடியுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை முதலே அவருக்கு வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், திரைத்துறை நட்சத்திரங்களும், தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்துள்ளனர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
Crazy crowd at his house 🔥#Karuppu #HappyBirthdaySuriya pic.twitter.com/3Na7FyH894
— Naveen (@NaveenSuriya_FC) July 23, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
