இயக்குனரான சூர்யாவின் மகள் தியா: ஆஸ்கர் விருது பட்டியலில்
பிரபல நட்சத்திர ஜோடிகளான சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா இயக்கியுள்ள படம் ஆஸ்கர் விருதுக்கு திரையிடப்பட தெரிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் மிக முக்கியமானவர்கள் சூர்யா- ஜோதிகா, இவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையில் செட்டிலாகியுள்ளது சூர்யாவின் குடும்பம், மூத்த மகள் தியா சமீபத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருந்தார்.
இவரின் சமீபத்திய புகைப்படங்கள் கூட வைரலானது, இந்நிலையில் பெற்றோரை போன்றே இவரும் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.
நீங்கள் நினைப்பது போன்று கதாநாயகியாக அல்ல, இயக்குனராக, ஆம் 13 நிமிடங்கள் அடங்கிய ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளாராம் தியா.
லீடிங் லைட் என பெயரிடப்பட்ட இப்படம், பாலிவுட் திரையுலகில் லைட் வுமன்களின் அனுபவங்களை பகிர்வது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறுவதற்காக அமெரிக்காவில் குறித்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதாம்.
இத்தகவலை பகிர்ந்துள்ளது 2டி என்டர்டெயின்ட் நிறுவனம், இத்தகவலை அறிந்த ரசிகர்கள் தியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
