பிகினி ஆடை சர்ச்சை.. விமர்சகர்களை வாயடைக்க வைத்த சாய்பல்லவியின் பதிவு
பிகினி ஆடை சர்ச்சைக்கு மறைமுகமாக பதில் கொடுக்கும் வகையில் சாய் பல்லவி வெளியிட்ட காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சாய் பல்லவி
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் இந்தியாவில் கோயம்பத்தூரை பிறப்பிடமாக கொண்டவர்.
மேலும் பிரபல டிவியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீடியாவிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து “பிரேமம்” திரைப்படத்தில் மலர் ரீச்சராக சினிமாவிற்குள் அறிமுகமானார்.
தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பு, நலினம் கொண்ட நடனம் இப்படி இளைஞர்களின் மனதை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.
சினிமாவில் கவர்ச்சி காட்டி பிரபலமாகும் நடிகைகளுக்கு மத்தியில் தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டும் நடிகையாக சாய் பல்லவி ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.
பிகினி ஆடை சர்ச்சை
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாய்பல்லவி நண்பர்கள் மற்றும் தங்கையுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்திருந்தார்.
அந்த புகைப்படங்களில் நீச்சல் ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்களும் இருந்தன. அதனை புகைப்படங்களை பயன்படுத்தி சிலர் முழு உருவத்தை Ai தொழில்நுட்பம் மூலம் வடிவமைத்திருந்தனர். ஆனால் சாய்பல்லவி தன்னுடைய முழு உருவத்தை எங்கும் பதிவிடவில்லை.
அப்படி தேடிப் பார்க்கும் பொழுது இது பொய்யான ஒரு வதந்தி செய்தி என அம்பலமானது. சமூக வலைத்தளங்களில் சாய் பல்லவி பற்றி போலியான செய்திகள் அதிகமாக வந்தாலும் அவர் அதற்கு எந்தவித பதிலும் கொடுக்காமல் அமைதியாக இருந்தார்.
தரமான பதிலடி
இதனை தொடர்ந்து இன்றைய தினம், பிகினி ஆடை சர்ச்சைக்கு பதில் கொடுக்கும் வகையில், சுற்றுலாவில் எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்களை பெரிய காணொளியாக எடிட் செய்து பதிவிட்டுள்ளார்.
அதிலுள்ள புகைப்படங்களை பார்க்கும் பொழுது சாய் பல்லவி மற்றவர்களை முகம் சுழிக்க வைப்பது போன்று எந்தவித ஆடையும் அணியவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், “இது தான் தரமான பதிலடி..”எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
