சூர்யாவை கியூட்டாக மிரட்டிய ஜோதிகா - வைரல் காணொளி
சூர்யாவை ஜோதிகா செய்தியாளர்கள் சந்திப்பில் கியூட்டாக மிரட்டிய காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

சூர்யா ஜோதிகா
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக சூர்யா - ஜோதிகா காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின் சூர்யா தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நிலையில், 6 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
மேலும் தற்போது சோலோ ஹீரோயினாகவும், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

குறிப்பாக பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.
தற்போது சூர்யாவின் கருப்பு படம் வெளியாகி அதை முற்றிலும் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர் மக்கள். இது சூர்யாவிற்கு மிகப்பெரிய கம்பேக் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் முன்னிலையில் சூர்யா ஜோதிகாவின் தனி காணொளி ஒன்று வைரலாகி அதை மக்கள் கலாய்த்தும் வருகின்றர்.

வைரல் காணொளி
தற்போது வைரலாகி வரும் காணொளியில் சூர்யாவும், ஜோதிகாவும் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்கள்.
அப்போது சூர்யாவை நிற்க வைத்து ஃபோட்டோ எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
ஆனால் இதை சூர்யா கவனிக்காமல் அங்கிருந்து கிளம்ப பார்த்தார். அப்போது மனைவி ஜோதிகா

உடனே அவரை 'சூர்யா போ போ.. சோலோவாக ஃபோட்டோ எடுக்க வேண்டும்' என சொல்ல; சிரித்துக்கொண்டே அங்கே சென்று போஸ் கொடுத்தார் சூர்யா.
இதை இணையத்தில் பல கருத்துக்களுடன் இணையவாசிகள் ட்ரென்டாக்கி வருகின்றனர்.
The way he listened to her without a second thought...🩶 pic.twitter.com/RmuYYsAWCx
— Anbu (@Anbu_Suryaa) May 22, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |