அன்று சாப்பாட்டுக்கே வழியில்லை... இன்று 30 கோடி நிறுவனத்தின் முதலாளி: நடிகர் சூர்யாவே காரணம்
அகரம் அறக்கட்டளையின் விதை திட்டம் மூலம் என்ஜினியரிங் படித்த அஜித் குமார் இன்று சென்னையில் பெரிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் வெற்றி கதை கேட்டு அனைவரும் அலண்டு போனர்.
அகரம் அறக்கட்டளை உதவி
தமிழ் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் தொடங்கிய அகரம் அறக்கட்டளை, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களது கல்விக் கனவுகளை நிறைவேற்றும் நோக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
அந்த அறக்கட்டளை செயல்படுத்தும் “விதை” திட்டம் மூலம் பல சாதனையாளர்கள் உருவாகியுள்ளனர்.
அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டுகளைக் கொண்டாடும் விதை விழாவில், அந்த திட்டத்தின் பயனாளிகளான சாதனையாளர்கள் தங்களது உணர்ச்சிமிகுந்த வெற்றிக் கதைகளை பகிர்ந்தனர். அந்த நிகழ்வில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அஜித் குமார்.
அஜித்தின் பயணத்தின் ஆரம்பம்
கடலூர் மாவட்டம், வட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த அஜித் குமார், சிறுவயதிலேயே தாயை இழந்தார். தந்தையுடன் மட்டுமே வாழ்ந்த அவரது வீட்டுக்கு “வீடு” என்றே சொல்ல முடியாத அளவுக்கே பலவீனமாக இருந்தது.
மழை பெய்யும்போது கூட தூங்க முடியாத நிலையில் இருந்தும், அஜித் கல்வியை விட்டுவிடவில்லை. பணத் தட்டுப்பாட்டால் பள்ளிக்கூடம் செல்வதே சவாலாக இருந்தாலும், நாளைப்போக்குக்காக மளிகைக் கடையில் வேலை செய்து, கல்வியை தொடர்ந்தார்.
சிறு வயதில் இருந்தே அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அறிவியலில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் படித்தார்.
அகரம் அறக்கட்டளை
பள்ளியில் நன்றாக மதிப்பெண்கள் பெற்று என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்ட அஜித், செலவுகளை சந்திக்க முடியாமல் திணறினார். அப்போது பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் அகரம் அறக்கட்டளை பற்றி தெரிந்துகொண்டார்.
அவர்களின் உதவியால், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் B.E. (EEE) படிப்பைத் தொடர்ந்தார். ஆங்கிலம் தெரியாமல் கல்லூரியை தொடங்கிய அஜித், நூலகத்தில் அதிக நேரம் செலவிட்டு, தனியாக பயில்வதன் மூலம் பாடங்களை புரிந்து கொண்டார்.
முதல் தலைமுறை பட்டதாரி முதல் தொழிலதிபர் வரை
5 ஆண்டு கடின உழைப்பின் முடிவில், அஜித் குமார் முதல் தலைமுறை பட்டதாரியாக மட்டுமல்ல, தனது கனவுகளை வழிகாட்டிய தொழில் பாதையை உருவாக்கியுள்ளார்.
இன்று அவர் சென்னையில் செயல்படும் “Bluewind Innovations” என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தற்போது ரூ.30 கோடி மதிப்பை எட்டியுள்ளது.
ஒரு காலத்தில் மளிகைக் கடையில் கூலி வேலை செய்த அஜித் குமார் இன்று தனது சொந்த நிறுவனத்தை நடத்துவது போல சினிமாவைப் போலவே உணர்வூட்டும் வெற்றிக் கதை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |