லோகேஷ் கனகராஜ் ரசிகையாக மாறிவிட்டேன்.. மொத்தமாக போட்டுடைத்த ஸ்ருதிஹாசன்
“லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அவரின் ரசிகையாக மாறிவிட்டேன்” என நடிகை ஸ்ருதிஹாசன் கூலி பட மேடையில் பேசியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
கூலி திரைப்படம்
தமிழ் சினிமாவில் இருக்கும் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரம் திரைப்படமும் நன்றாக ஓடியது.
இதனை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஆமீர்கான், சவுபின் ஷாயிர், சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது.
மனம் திறந்த ஸ்ருதிஹாசன்
இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் பேசிய காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அதாவது, “இன்றைய தினம் என்னுடைய திரைப்பட வாழ்க்கையில், வாழ்க்கையில் முக்கியமான நாளாகும். இந்த திரைப்படத்தில் நடித்தது முதல்நாள் பள்ளிக்கு போவது போல இருந்தது. சவுபின் உங்களுடைய சிறப்பான நடிப்பை பார்க்கப்போகிறார்கள்.
சத்யராஜின் மகளாக நடித்தது மகிழ்ச்சி. உங்களைப் பற்றி அப்பா (கமல்) மூலம் நிறைய விடயங்கள் தெரியும். நாகர்ஜூனா சாமிங் நடிகர். சிறப்பாக நடிப்பை படத்தில் காட்டியிருப்பார்.
ரசிகையாகவே மாறிவிட்டேன்..
கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. விக்ரம் படத்தை பார்த்த பின்னர் உங்களுடைய ரசிகையாகவே மாறிவிட்டேன்.
லோகேஷ் கனகராஜ் படத்தில் நிறைய சத்தம் இருந்தாலும், சண்டை இருந்தாலும் அவர் ஒருநாள் கூட கத்தியது இல்லை. அமீர்கான் சார் உங்களுடன் நடித்தது மகிழ்ச்சி. அனிருத்தை நான் சின்ன பையனாக பார்த்திருக்கிறேன். இன்று பெரிய இசையமைப்பாளராக இருக்கிறார்.
ரஜினி சாருடன் பணியாற்றியதை பெருமையாக பார்க்கிறேன். நான் வளர்ந்த வீட்டில் உங்கள் பற்றிய நல்ல விடயங்களை அதிகமாக கேட்டிருக்கிறேன். அத்தனையும் உண்மை..” எனக் கூறிக் கொண்டு இறுதியாக சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா பாடலை பாடியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
