நடுரோட்டில் துணை நடிகை செய்த வேலை! ஆண் நபருடன் அரங்கேறிய வாக்குவாதம்
துணை நடிகர் ஒருவர் நடுரோட்டில் தனது நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
நடுரோட்டில் துணை நடிகையின் செயல்
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில், வெகு நேரமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இதனுள் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகை அங்கிதா விஸ்வநாத் மற்றும் அவரது ஆண் நண்பர் பீகாரைச் சேர்ந்த நிதிஷ்குமார் இருந்துள்ளனர்.
இருவருக்கும் இடையே காருக்குள் வாக்குவாதம் அரங்கேறியுள்ள நிலையில், திடீரென நடுரோட்டில் இரங்கி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அவதானித்த அக்கம்பக்கத்தினர் கணவன் மனைவி தகராறு என்று நினைத்து சமாதானம் செய்வதற்கு முன்வரவில்லை.
இந்த ஜோடிகள் மும்பையில் இருந்து கோயம்புத்தூரில் இஷா மையத்திற்கு மகா சிவராத்திரி விழாவிற்கு வந்துள்ளனர். சிவராத்திரி விழா முடிந்து தமிழகத்தை சுற்றிப் பார்க்க நினைத்து வாடகை கார் எடுத்து பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் விடுதி எடுத்து தங்கிய இவர்கள், பின்பு ராமேஸ்வரம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இடையில் ஆண் நண்பர் அத்துமீறி நடந்து கொண்டதால், அவரிடம் நடிகை சண்டை போட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், நிதிஷ் குமாரிடம் விசாரித்த போது, தான் பணத்தை எடுக்கவில்லை... அவரிடம் அத்துமீறி நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இருவருக்கும் அறிவுரை கூறி பொலிசார் அவர்களது ஊருக்கு செல்லும்படி கூறி அனுப்பியுள்ளனர்.