சோப்பு கரைசலை ஜுஸ் என்று கொடுத்த பணியாளர்! காரணம் என்ன?
சீனாவில் ஜுஸ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சோப்பு கரைசலை கொடுத்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜுஸ்க்கு பதில் சோப்பு கரைசல்
சீனாவின் ஜெஜியாங் பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், வுகாங் என்ற பெண் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் உணவு அருந்த சென்றுள்ள நிலையில், அங்கே ஜுஸ் ஆர்டர் செய்துள்ளனார்.
பரிமாறும் நபரும் ஜுஸ் கொண்டு வந்து கொடுத்த நிலையில், அதனை குடித்த அனைவருக்கும் தொண்டையில் எரிச்சல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சோதனையில் சோப்பு கரைசலை குடித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உணவகம் அளித்த விளக்கத்தில் சப்ளையருக்கு பார்வை குறைபாடு இருந்ததாகவும், சோப்பு கரைசல் கேன் ஜூஸ் பாட்டில் போன்று இருந்ததால் தவறுதலாக அதை ஊற்றி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் சீனாவில் பல சோப்பு கரைசல் கேன்கள் கலர் கலரான ஃப்ளேவர்களில் ஜூஸ் பாட்டில் போலவே இருப்பதால் குழப்பங்கள் நிகழ்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.