'ஏவி எம் ஹெரிடேஜ் மியூசியத்தில்' பாயும் புலி நினைவுகளை கிளறிய றஜினிகாந்த் வைரலாகும் பகைப்படங்கள்
சமீபத்தில் சென்னையில் இருக்கும் ஏவி எம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்று அங்கு பாயும் புலி படத்தில் பிரபலமாக பயன்படுத்தப்பட்ட சுசூகி ஆர்வி90 பைக்குடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
1960 ம் ஆண்டில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் பயன்படத்தப்பட்ட கார்கள் 20 மோட்டார் சைக்கிள்கள் தமிழ் சினிமாவின் ஞாபகப்படுத்தும் வகையில் சென்னையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் ஏவிஎம் சரவணனின் மகன் எம்.எஸ். குஹனால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரங்காட்சியகத்தின் பெயர் ஏவி எம் ஹெரிடேஜ் மியூசியம் எனப்படும்.
இந்த அரங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் ஜாம்பவான்களான கமல்ஹாசன், சிவகுமார், ரஜினிகாந்த் மற்றும் ஏவிஎம் ஸ்டுடியோ குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சினிமாவின் பாரம்பரியத்தை நினைவுகூறுமுகமாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் வாகனங்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்றோர் படங்களில் அதி உயர்ந்த ஆடைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அரங்காட்சியகத்திற்கு சமீபத்தில் றஜினிகாந்த் வருகை தந்து தன்னுடைய ‘பாயும் புலி’ படத்தில் தான் பயன்படுத்திய சுஸுகி RV90, பைக்கின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இவரின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.