76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி - 2026 சனி பெயர்ச்சியின் நிலை என்ன?
ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக அறியப்படும் சனி பகவான் தனது சக்தியை சுமார் 72 நாட்கள் இழந்திருக்கிறார். இதனால் பலன்பெறும் ராசிகள் யாவர் என்பதை பார்க்கலாம்.
சனிபெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் சனி பகவான் நீதியின் அரசனாகவும், மனிதர்களின் கர்ம வினைகளுக்கேற்ப பலன்களை அளிக்கும் முக்கிய கிரகமாகவும் கருதப்படுகிறார்.
ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் உயர்வு, தாழ்வு, துன்பம், பொறுமை மற்றும் வெற்றியின் பின்னணியில் சனியின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி முதல் சனி பகவான் மிகவும் பலவீன நிலையில் பயணித்து வருகிறார். இதனால் அவர் வலுவிழந்த நிலையில் இருப்பதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கால கட்டம் சுமார் 76 நாட்கள் ஆகும். அதாவது பிப்ரவரி 2026 வரை நீடிக்கும் இந்த காலகட்டத்தில், சனியின் கொடிய தாக்கம் குறைவதால் சில ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக அனுபவித்து வந்த கஷ்டங்களில் இருந்து நிம்மதி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அப்படி கஷ்டம் நீங்கி அதிதுஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

துலாம்
- துலாம் ராசிக்கு ஆறாவது வீட்டில் சனி பகவான் பெயர்ச்சியாகிறார். ஆறாவது வீடு சக்தி வாய்ந்த இடமாக கருதப்படுகிறது.
- இதனால் மாணவர்களுக்கு இருந்து வந்த கல்வித் தடைகள் நீங்கும்.
- உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
- வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனவு நிறைவேறும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் பணியிடம் மாறுதல் ஆகியவை கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுப்பெறும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
கும்பம்
- கும்ப ராசியின் இரண்டாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இரண்டாவது வீடு தன ஸ்தானம் ஆகும்.
- சனியின் பலம் குறைவாக இருப்பதால் கும்ப ராசிக்காரர்களின் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிபை அதிகரிப்பீர்கள்.
- நீண்ட நாட்களாக வந்த உடல் நலப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் தீர்ந்து அமைதியும், செழிப்பும் அதிகரிக்கும்.
- வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.
மீனம்
- மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் முதல் வீட்டில் இருக்கிறார். அவர் பலவீனமான நிலையை அடைந்திருப்பதால் மீன ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த மன அழுத்தம் நீங்கும்.
- தடைபட்டு நின்ற வேலைகள் விரைவில் முடியும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் லாபத்தையும், வளர்ச்சியையும் காண்பீர்கள்.
- வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).