இதுநாள் வரையில் நீங்கள் பார்த்திராத சூப்பர்ஸ்டாரின் புகைப்படம்! அதுவும் ஜோடியாக
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரின் மனைவி லதாவுடன் இருக்கும் முந்தைய கால புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தான் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் வாஜி கெய்க்வாட்.
ரஜினிகாந்த் அந்தக்காலக்கட்டத்திலே நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் பல மேடை நாடகங்களில் பங்கு பற்றியிருக்கிறார். காலப்பபோக்கில் நடிகராகும் ஆவலில் சென்னை வந்த ரஜினி நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று வந்தார்.
பயிற்சிக்குப்பிறகு 1975ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகாராக அறிமுகமானார். அதன் பிறகு தன் இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராக மாறி இருக்கிறார்.
ரஜினியின் 45 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் கருப்பு - வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முதல் நடிகர் என்ற சாதனைக்கு சொந்தகாரரும் இவர்தான்.
திருமணம்
ரஜினிகாந்த் 16 பிப்ரவரி 1981 அன்று லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ரஜினி மற்றும் லதாவின் முந்தைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அப்புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் ரஜினியின் மனைவி லதா.
அதனால் தற்போதைய புகைப்படத்தையும் முந்தைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்து இவரா அவர் என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.