விநாயகர் சதுர்த்தியில் இவரை பார்க்காதீங்க.. கடவுளாக இருந்தாலும் குற்றம்
ஆகஸ்ட் 27 தேதி உலக நாடுகளில் வாழும் இந்து மக்களால் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து 10 நாட்களுக்கு நடந்து வரும் இந்த பண்டிகையின் கடைசி நாள் அனந்த சதுர்த்தசி அன்று விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரைக்கப்படுகின்றன.
இந்த பூஜை வீட்டில் செல்வம், சுகம், அதிர்ஷ்டம் ஆகியன கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்றன. இதனை வட இந்தியாவில் வாழும் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி தினத்தில் மறந்தும் சந்திரனை பார்க்கக் கூடாது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கான புராண விளக்கம் யாருக்கும் தெரியாவிட்டாலும் பராம்பரியம் என நினைத்து தற்போது உள்ளவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
அந்த வகையில், ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது? 2025-இல் எத்தனை மணி நேரம் சந்திரனைத் தவிர்க்க வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கான விளக்கங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
புராணக் கதை
புராணக் கதையில், விநாயகர் தன்னுடைய வாகனமான எலியின் மீது பயணம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது விநாயகரின் உடல் பருமன் காரணமாக அவர் சற்று தடுமாறியுள்ளார். இதனை கவனித்த சந்திரன் புன்னகைக்க, அதில் கடுப்பான விநாயகர், “ இந்த நாளில் உன்னை பார்ப்பவர்கள் அவமானம் பட்டு, பொய் குற்றங்களுக்கு ஆளாகுவார்கள்..” என சாபம் கொடுத்துள்ளார். இதனால் விநாயகர் சதூர்த்தி நாளில் சந்திரனை பார்த்தால் சாபத்தால் பாதிக்கப்படலாம் என பக்தர்களுக்கு பயம் வந்துள்ளது.
வட இந்தியர்களின் நம்பிக்கை
விநாயகர் சதுர்த்தியை பாரம்பரியமாக கடைபிடித்து வரும் வட இந்தியர்கள், சதுர்த்தித் திதி ஆரம்பமாகி முடியும் வரை சந்திரனை பார்க்கமாட்டார்கள். ஏனெனின் சந்திரனை பார்க்கும் பொழுது பொய் குற்றங்கள் வந்து விடும் என நம்புகிறார்கள். பக்தர்களுக்கும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
நேர விவரங்கள்
2025-இல் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 26 – மதியம் 1:54 மணி முதல் இரவு 8:29 மணி வரை ஆகஸ்ட் 27 – காலை 9:28 மணி முதல் இரவு 8:57 மணி வரை சந்திரனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் பார்ப்பவர்களுக்கு அசுபம் ஏற்படும்.
சந்திரனை பார்த்தால் பரிகாரம்
சமய நம்பிக்கையின் படி, விநாயகர் சதுர்த்தி நாளில் தவறுதலாக சந்திரனை பார்த்து விட்டால் அதனை பாவ நிவிர்த்தி மந்திரம் கூறி போக்க வேண்டும்.
“சிங்கப்ராஸேனமவதீஷ்யம்ஹோ ஜாம்பவதா ஹத:” என்ற மந்திரம் கூறினால் பாவங்கள் மறையும் என கூறப்படுகிறது.
மகிழ்ச்சி, செழிப்பு
விநாயகர் சதுர்த்தி பண்டிகை மனித வாழ்க்கைக்கு தேவையான மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல தொடக்கம் ஆகியவற்றை கொடுக்கும் என்பது மக்களின் பெரிய நம்பிக்கையாக இருந்தது. இந்த நாளில் சந்திரனை பார்ப்பதை மாத்திரம் தவிர்த்தார்கள். மக்கள் மத்தியில் இந்த நாளில் ஏற்படும் பலன்கள் பற்றிய நம்பிக்கை இதுவரையும் குறையாமல் இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
