ரஜினியின் மகளாக இருப்பதே பிரச்சினை! சமாளிக்க முடியவில்லை...அதிர வைத்த மூத்த மகள் ஐஸ்வர்யா!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருப்பதில் நிறைய பிரச்சினை இருப்பதாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கலந்துகொண்டார்.
அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், "நான் ரஜினியின் மகளாக இருப்பதால், ரொம்பவே கண்காணிக்கப்படுவதாகவும், இதனை சமாளிக்க முடியவில்லை" என்றும் கூறினார்.
மேலும், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருப்பதால், பல இடங்களில் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், எப்போதுமே எங்கள் ஒழுக்கம் குறித்து பலரும் பேசி வருவதால் அது கஷ்டமாக இருக்கிறது" என்றும் கூறியுள்ளார்.
இந்த விடயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.