தயிர் சாதத்தின் சுவையை அதிகரிக்க - இதை சேருங்க போதும்
கோடை காலத்தில் தயிர் சாதம் செய்ய வேண்டும் என்றால் இந்த ஒரு பொருளை சேர்த்து செய்ங்க சுவை அள்ளும்.

தயிர் சாதம்
தற்போது கோடை காலம் என்பதால் மக்கள் நீரேற்றமாக உடலை வைத்திருக்க லேசான உணவுகளை சாப்பிட ஆசைப்படுவார்கள்.
அந்த உணவு பட்டியலில் முதல் இடம் பிடிப்பது தயிர் சாதம் தான். இந்த தயிர் சாதத்தை பலருக்கும் எப்படி சுவையாக செய்வதென்று தெரியாது.
அந்த வகையில் நமக்கு பிடித்த தயிர் சாதத்தை சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- வேக வைத்த சாதம்: 1 கப்
- தயிர்: 1 கப்
- தாளிப்பதற்கு
- எண்ணெய்: 1 மேசைக்கரண்டி
- கடுகு: 1 மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை: 1 கொத்து (சுமார் 8-10 இலைகள்)
- காய்ந்த சிவப்பு மிளகாய்: 1 துண்டு
- வறுத்த வேர்க்கடலை: 2 மேசைக்கரண்டி
- உப்பு: தேவையான அளவு
- அலங்கரிக்க: 2 மேசைக்கரண்டி மாதுளை விதைகள் மற்றும் 1/2 கப் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்

செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை நன்றாக அடித்து மென்மையாக்கிக்கொள்ளுங்கள்.
அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.

பின்னர் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பு தயார் செய்யவும்.
இதை தயிர் சாதத்தில் ஊற்றி கலந்து விடுங்கள்.
இறுதியாக வறுத்த வேர்க்கடலை, நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் மாதுளை விதைகளை சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவு தான் சுவை மற்றும் புத்துணர்ச்சி நிறைந்த தயிர் சாதம் தயார்.