Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதி வாரத்தினை நெருங்கியுள்ள நிலையில் கடைசியாக Good Bye சொல்லும் காணொளி வெளியாகி கலங்க வைத்துள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 நாளையுடன் முடிவடையும் நிலையில், சில ப்ரொமோ காட்சிகளும் வெளியாகி வருகின்றது.
பல வாரங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த பேட்டியில் நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலி, சரண்ராஜா, தர்ஷனா, ஆபிரகாம் என ஏழு போட்டியாளர்கள் மட்டும் இறுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்டு போட்டியாளர்கள் தங்களது குரல் திறமையினை வெளிக்காட்டி நடுவர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வந்தனர்.
இந்நிலையில் நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்று பிரபல ரிவியில் Good Bye காட்சியினை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த சீசன் முழுவதிலும் நடைபெற்ற சில சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து காணொளியாக வெளியிட்டுள்ளது.
இதில் போட்டியாளர்கள் மட்டுமின்றி தொகுப்பாளர்கள், நடுவர்கள் என அனைவரும் கண்ணீர் சிந்தியுள்ளனர். மேலும் கடைசியாக ஒருவரை கட்டியணைத்து தங்களது அன்பை வெளிக்காட்டியுள்ளது பார்வையாளர்களையும் கண்கலங்கவே வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |