சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கிக்கு எப்போ திருமணம்? அவரின் அம்மாவே பகிர்ந்த தகவல்
சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி அண்மையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE காரை வாங்கியுள்ள நிலையில், அவரின் திருமணம் குறித்து, அவரது அம்மா பேசியுள்ள விடயங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் வாய்ப்புகளை செல்வாக்கை பயன்படுத்தி எளிமையாக பெறாமல் திறமையை நிரூபித்து பெற்றவர்களுள் இவரும் ஒருவர்.
பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியிலும் பங்குபற்றி மேலும் பிரபல்யமடைந்தார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
முதல் படத்திலேயே அசத்தலாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தற்போது மேடை நிகழ்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் சிவாங்கி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.
அண்மையில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாங்கியின் திருமணம் எப்போ?
இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் சிவாங்கியில் அம்மாவும் பிரபல பாடகியுமான ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் சிவாங்கியின் திருமணம் குறித்து கேட்கப்ட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், கடந்த இரண்டு வருடங்களாகவே சிவாங்கிக்கு வரன் பார்த்து வருவதாகவும், சிவாங்கியே தனக்கான துணையை தேடிவதற்கும் சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிவாங்கியின் நண்பர் வட்டாரங்கள் 27,28 வயதுக்குட்பட்வர்களாக இருப்பதால், இவர்களிடம் பேசும் போது சில சமயங்களில் சிவாங்கிக்கு திருமணம் குறித்த சந்தேகங்கள் எழுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிவாங்கி என்னிடம் வந்து திடீரென கேட்டா, அம்மா 30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா என்று...
நான் யார் அப்படி சொன்னது என கேட்டேன், ஸ்ருதிகா அக்கா தான் சீக்கிரம் குழந்தை பெத்துக்கோ முப்பது வயது தாண்டினா குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களுக்கு கடிமாகிவிடும் என குறிப்பிட்டார்.
அதற்கு சிரித்தபடியே... அதற்காக திருமணத்துக்கு முன் குழந்தை பெத்துக்கவா முடியும் என தான் கூறியதாக நகைச்சுவையாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |