சூப்பர் சிங்கரில் 60 லட்சம் ரூபாய் வீட்டை தட்டித்தூக்கிய அருணா... இரண்டாவது யார் வந்தது?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் இடத்தை பிடித்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை தட்டித்தூக்கியுள்ளார் அருணா.
சூப்பர் சிங்கர் சீசன் 9
பிரபல ரிவியில் சனி மற்றும் ஞாயிறு கிழமையில் மாலையில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9. இந்நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன், உன்னி கிருஷ்ணன் நடுவராக இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதி போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஐந்து பேர் காணப்பட்டனர்.
இன்று இறுதி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அருணா முதல் இடத்தையும் தட்டித்தூக்கியுள்ளார்.
இவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஜெர்சன் இரண்டாவது இடத்தையும், பிரசன்னா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |