Super Singer Junior: மேடையில் பாடி அசத்திய வெளிநாட்டு சிறுமி... நடுவர்கள் சொன்னது என்ன?
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.
சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்தும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஆர்யன், டார்ஜிலிங்கை சேர்ந்த சவுராபி மற்றும் பார்வை குறைபாடு உள்ள சிறுவன் சர்வேஷ் இவர்கள் பாடும் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.

தற்போது , டார்ஜிலிங்கை சேர்ந்த சவுராபி மற்றும் மித்ரனும், கேரளாவை சேர்ந்த ஆர்யன் மற்றும் ஸ்ரவனா ஆகியோர் பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடலை நடுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்கின்றனர்.
இருவரின் திறமைக்காக நடுவர்கள் சேர்ந்து கோல்டன் ஷவரை அளித்துள்ளனர். இதில் கேரளாவை சேர்ந்த சிறுவன் மற்றும் அவருடன் இருந்த ஸ்ரவனா பாடுகையில் இமான் ஸ்ரவனாவை பாராட்டியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |