சோஷியல் மீடியா பக்கம் வரமாட்டேன்! நடிகை கயாடு லோஹருக்கு என்னாச்சு?
நடிகை கயாடு லோஹர் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து விலகப்போவதாக தற்போது ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார்.

கயாடு லோஹர்
பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக டிராகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் கயாடு லோஹர். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்.
தமிழ் மட்டுமன்றி மலையாளத்திலும் நடித்து பல ரசிகர்களை ஈர்த்து வருகிறார் கயாடு லோஹர்.
இவர் தன்னுடைய கரியரில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அப்படி இருக்க தற்போது கயாடு லோஹர் திடீரென சோஷியல் மீடியாவுக்கு வர மாட்மேன் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளார்.

சோஷியல் மீடியா வரமாட்டேன்
தற்போது நடிகை கயாடு லோஹர் இவ்வாறு அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதாவது 'உடலுக்கு கொடுப்பதை போலவே மனதுக்கும் சில காலம் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம்.
சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது எனக்கு ரொம்பவே மன மகிழ்ச்சியை தந்தாலும், தற்போது சிறிது காலம் சோஷியல் மீடியாவை விட்டு விலகியிருக்க முடிவு செய்துள்ளேன்'
என கயாடு லோஹர் மிகவும் உணர்ச்சியுடன் பேசி உள்ளார்.

கயாடு லோஹருக்கு தற்போது 26 வயதாகும். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 3.1 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் கூலி படத்துக்குப் பிறகு குவிந்த ட்ரோல்கள் காரணமாக சில நாட்கள் சோஷியல் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்பதுடன் தற்போதைய அறிவிப்பு ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |