Super Singer Junior: பார்வையற்ற சிறுவனின் குரல்! கலங்கி நின்ற டி.ராஜேந்தர்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.
சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்தும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஆர்யன், டார்ஜிலிங்கை சேர்ந்த சவுராபி மற்றும் பார்வை குறைபாடு உள்ள சிறுவன் சர்வேஷ் இவர்கள் பாடும் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.

தற்போது டார்ஜிலிங்கை சேர்ந்த சவுராபி, பார்வையற்ற சிறுவன் சர்வேஷ் இவர்களின் குரல் ஒட்டுமொத்த அரங்கத்தையும், ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்து வருகின்றது.
இந்த வாரம் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் வருகை தந்துள்ள நிலையில், சிறுவர்களின் திறமையைக் கண்டு பிரமிப்பில் காணப்படுகின்றார்.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள்
அதிலும் சர்வேஷ்வரன் மற்றும் சவுராபி இவர்களின் பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்ததுடன், தனது கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |