விபத்தில் சிக்கிய பிரபல பாடகி! 10 வினாடியில் நடந்தது என்ன?
முன்னணி பாடகியாக வலம் ரக்ஷிதா சுரேஷ் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய பாடகி
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ர்ந்தவர் ரக்ஷிதா சுரேஷ், இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை வென்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
1998ம் ஆண்டு பிறந்த ரக்ஷிதா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முன்பாக ரிதம் ததீம் என்ற நிகழ்ச்சியிலும், 2009ம் ஆண்டு லிட்டில் ஸ்டார் சிங்கர் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
2023ம் ஆண்டு விஜய் டெலிவிஷன் விருதுகளில் விருப்பமான பாடகிக்கான விருதை ரக்ஷிதா வென்றது குறிப்பிடத்தக்கது. இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
இந்நிலையில் மலேசியா சென்ற இவர், அங்கு காரில் பயணித்து கொண்டிருந்த போது கார் சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பாடகி ரஷ்மிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தனது விபத்து குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
"தான் மிகப்பெரிய விபத்து ஒன்றில் சிக்கினேன். சில நொடிகளில் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கண்முன் தோன்றின. ஏர் பேக்குகளுக்கு நன்றி. நடந்த விபத்திலிருந்து இன்னும் நான் மீளாமல் அதிர்ச்சியில் உள்ளேன்... யாருக்கும் எந்த உயிர் சேதமும் இல்லை... லேசான காயங்களுடன் தப்பித்து விட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.
??? pic.twitter.com/NU3gUBtqjL
— Rakshita Suresh (@RakshitaaSuresh) May 7, 2023