சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி வீட்டில் நடந்த கொண்டாட்டம்! சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலங்கள்
சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி வீட்டில் நடந்த விசேஷத்தில் பிரபல ரிவி பிரபலங்கள் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் அளித்துள்ளனர்.
சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகியுள்ளவர்கள் தான் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி.
கிராமத்து மண் மனம் கமழும், நாட்டுப்புற பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி பிரபலமானவர்கள் ராஜலட்சுமி மற்றும் இவரது கணவர் செந்தில் கணேஷ். இருவருமே நாட்டுப்புற கலைஞர்கள் என்பதால் ஒரே சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் ராஜலட்சுமி இறுதிப்போட்டி வரை செல்லாவிட்டாலும், செந்தில் பைனல் வரை சென்று டைட்டிலையும் தட்டி தூக்கினார். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலம், இவர்கள் இருவரின் வாழ்க்கையையே திருப்பி போட்டது.

வீட்டில் நடந்த விசேஷம்
பல படங்களுக்கு பின்னணி பாடி வருவது மட்டும் இன்று, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தங்களை போல் நாட்டுப்புற கலையில் முன்னேற துடிப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்கள்.
எப்போதும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இருவருமே தற்போது தங்களுடைய வீட்டில் நடந்த, விசேஷம் குறித்த புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஆம் இந்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு காதுகுத்து நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பிரபல டிவி தொகுப்பாளர் மகேஷ், விஜய் டிவி பிக்பாஸ் பிரபலன்களான சின்ன பொண்ணு, வேல் முருகன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி புஷ்பா படத்தில் ராஷ்மிகாவுக்காக பாடிய, சாமி பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்றநிலையில், விருமன் படத்தில் இவர் பாடிய பாடல் நடிகை அதிதியால் நீக்கப்பட்டது.
ஆம் படத்தின் நாயகியான அதிதியை யுவன் ஷங்கர் ராஜா பாட வைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

