சூப்பர் சிங்கரில் பாடலை பாதியில் நிறுத்திய சிறுமி... நடுவர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நஷ்ரீன் என்ற சிறுமி பாடலை பாதியில் நிறுத்திவிட்டு, ரீ டேக் கேட்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
இவர்களுக்கான குரல் தேடல் சில வாரங்களுக்கு முன்பு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த நிகழ்ச்சியில் நஸ்ரின் என்ற சிறுமி ரஜினி பட பாடல் ஒன்றினைப் பாடியுள்ளார். ஆரம்பம் எல்லாம் அமர்க்களமாக இருந்த நிலையில், இடையில் சொதப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்ஷா படத்தில் ரஜினியின் சீனுடன் குறித்த பாடலை முதலில் ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் வரும் ஸ்டைலு ஸ்டைலு பாடலைத் தான் பாடினார்.
ஆனால் திடீரென பாதியில் நிறுத்திவிட்டு, மறுபடியும் போடுறீங்களா? என்று ரீ டேக் கேட்டுள்ளார். இதற்கு பாடகி சித்ரா அப்படி கொடுக்க முடியாது,.... இதுதான் போட்டி என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |