Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... இறுதியில் நடந்த எதிர்பாராத டுவிஸ்ட்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நஷ்ரீன் என்ற சிறுமி பாடலை பாதியில் நிறுத்தியது ப்ரொமோ காட்சியில் வெளியான நிலையில் இவர், இப்பாடலை முழுவதுமாக பாடி அசத்திய காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நஷ்ரீன் என்ற சிறுமி ரஜினி படமான பாட்ஷா படத்தில் ஸ்டைலு ஸ்டைலு தான் என்ற படத்தை பாடுவதற்கு தயாராக வந்தார்.
ஆரம்ப எண்ட்ரி அருமையாக இருந்த நிலையில், ஆனால் பாடலைப் பாடும் போதே தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால் நடுவர்களிடம் ரீடேக் கேட்டார்.
இதற்கு சித்ரா அம்மா மறுப்பு தெரிவித்ததால், குறித்த சிறுமி சரியாக பாடினாரா என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்தது.
தற்போது சிறுமி குறித்த பாடலை அசத்தலாக பாடியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. அதாவது ஆரம்பத்தில் மட்டுமே தடுமாற்றம் ஏற்பட்ட நிலையில், முடிவில் யாரும் எதிர்பாராத அளவிற்கு டுவிஸ்ட் வைத்து தனது பாடலை பாடி முடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |