Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன?
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நஷ்ரீன் இந்த வாரம் தான் பாடிய பாடலை பாதியில் நிறுத்தியுள்ளது நடுவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நஷ்ரீன் என்ற சிறுமி இந்த வாரம் Vibe Song ரவுண்டில் பாடல் ஒன்றினைப் பாடியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பாடலை இடையில் நிறுத்தியுள்ளார்.
மீண்டும் மீண்டும் முயற்சித்தும் நஷ்ரீனால் முடியவில்லை... ரசிகர்கள் நடுவர்கள் அதிருப்தியில் காணப்பட்டதுடன், பாடகி சித்ரா எடுக்கும் முடிவு என்ன என்பதை பார்வையாளர்கள் அவதானித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
