பிக்பாஸ் முத்துக்குமரன் வீட்டில் ஒன்றுக் கூடிய பிரபலங்கள்- என்ன விஷேசம் தெரியுமா?
பிக்பாஸ் முத்துக்குமரன் வீட்டில் ஒன்றுக் கூடிய பிரபலங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் வெகு விமர்சையாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 8 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஒன்பதாவது சீசனுக்கு செல்லவிருக்கிறது. ஆனால் வழக்கமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் இல்லாமல் வேறு தொலைக்காட்சியில் இனி வரும் சீசன்கள் ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல சின்னத்திரை ஜோடிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன. ஆனாலும் ஒருசிலர் மாத்திரமே இன்னும் உறவில் இருக்கிறார்கள்.
முத்துக்குமரன் வீட்டில் விஷேசம்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னராக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் தான் பேச்சாளர் முத்துக்குமரன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுத்த பணத்தை வைத்து சொந்தமாக வீடு கட்டப்போவதாக கூறினார்.
இதன்படி, பிக்பாஸ் பிரபலங்களை அழைத்து சொந்த ஊரில் புதிய வீடு கட்டுவதற்கான கிரஹப்ரவேசப் பூஜை நடத்தியுள்ளார்.
இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. ஆனால் எதற்காக இவர்கள் ஒன்றுக் கூடினார்கள் என்ற விடயம் பெரிதாக பேசப்படவில்லை.
அத்துடன் பிக்பாஸ் ரசிகர்கள் முத்துகுமரனின் முயற்சிக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
