Super singer: தன்னுடைய அசாத்திய திறமையால் நடுவரை குஷிப்படுத்திய சிறுமி.. கடைசியில் பிரியங்கா கொடுத்த பட்டம்
சக போட்டியாளர்களை கலாய்த்து நடுவர்- இமானை குஷிப்படுத்திய சிறுமியின் காணொளி இணையவாசிகளை கவரந்துள்ளது.
Super singer
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது.
தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
போட்டியாளரின் அசாத்திய திறமை
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் Celebrating SPB டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற டாஸ்க்கள் போன்று இந்த டாஸ்க்கையும் சிறுவர்கள் விரும்பி செய்து வருகிறார்கள்.
அதில் ஒரு சிறுமி, சக போட்டியாளர்கள் போன்று செய்து காட்டி அசத்தியுள்ளார். இவர் செய்து காட்ட இமான் கண்டுபிடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பிரியங்காவும் அவரின் திறமையை போக்கிரி பட வடிவேலுவுடன் ஒப்பிட்டு ஒரு சில வார்த்தைகளை பேசியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |