Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் சாராஸ்ருதி மற்றும் நஸ்ரின் இருவரும் போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், நடுவர்கள் முடிவு எடுக்க முடியாமல் திணறியுள்ளனர்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் நேருக்கு நேர் போட்டி நடைபெறுகின்றது. இதில் காயத்ரி பிரியங்கா அருகில் சென்று நிற்பதற்கு தயக்கம் காட்டியுள்ளார்.
ஏனெனில் நான் இறுதிச்சுற்று செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். அதாவது பிரியங்கா அருகில் நின்றால் தான் வெளியேறி விடுவேன் என்று கூறியுள்ளார்.
பின்பு பிரியங்காவின் ஆசையை நிறைவேற்ற அவரது அருகில் நின்று பாடல் பாடியதுடன், கடைசியாக வெற்றியும் பெற்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |