யாழ் மண்ணை வந்தடைந்த சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா... வைரலாகும் புகைப்படங்கள்
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தனது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்த சிந்துமயூரன் பிரியங்கா மீண்டும் தனது சொந்த ஊரான யாழ்பாணத்திக்கு இன்று பலாலி விமான நிலையம் ஊடாக வந்தடைந்துள்ளார்.
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா கலந்துகொண்டு தனது பாடல் திறமையை வெளிப்படுத்தினார்.
குறித்த சிறுமியின் குடும்பமானது பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருந்தாலும் அவர் தனது திறமையால் இந்த பாடல் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு, அதில் பங்குபற்றி நடுவர்கள் உட்பட பலரது பாராட்டினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.







